1. Home
  2. தமிழ்நாடு

காஞ்சியில் பரபரப்பு.. கேண்டீனில் சாப்பிட்ட 66 பெண்களுக்கு வாந்தி, மயக்கம்..!

காஞ்சியில் பரபரப்பு.. கேண்டீனில் சாப்பிட்ட 66 பெண்களுக்கு வாந்தி, மயக்கம்..!

வாலாஜாபாத் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை கேண்டினில் உணவு சாப்பிட்ட 66 பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் பகுதியில் பைக் மற்றும் கார்களுக்கு தேவையான கேபிள்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில், நேற்று இரவு பணிக்கு வந்தவர்கள் தொழிற்சாலையில் உள்ள கேண்டீனில் உணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்தில், உணவருந்திய 66 பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிற்சாலை பஸ் மற்றும் ஆம்புலன்ஸ்களில் அவர்கள் ஏற்றப்பட்டு, 55 பேர் வாலாஜாபாத் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்கும், 11 பேர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொழிற்சாலையில் பணி புரிந்தவர்களிடையே கடும் பீதியையும், அச்சத்தையும் உண்டாக்கியது. மேலும் தொழிற்சாலையில் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியர் சீசர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, வாலாஜாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like