1. Home
  2. தமிழ்நாடு

மாதம் ரூ.60,000 சம்பளம்.. விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

மாதம் ரூ.60,000 சம்பளம்.. விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

டெல்லியில் செயல்பட்டு வரும் விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்ரவரி 5-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாதம் ரூ.60,000 சம்பளம்.. விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

பணி: Management Trainees

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.60,000

வயது வரம்பு: 01-01-2023 தேதியின்படி 21 முதல் 30 வயது.

தகுதி: கலை, அறிவியல், வணிகவியல், விவசாயம், தோட்டக்கலை, மேலாண்மை, புள்ளியியல், மனிதவள மேலாண்மை போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 25-02-2022

தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aicofindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.aicofindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Trending News

Latest News

You May Like