அதிர்ச்சியில் ஊழியர்கள்..!! 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனம்..!!
டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ், அதன் லாபத்தை அதாவது பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6,000 ஊழியகளை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.அந்நிறுவனம் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சியடைந்த சுவாச சாதனங்களை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த 6,000 பணிகளில் பாதி வேலைகள் இந்த ஆண்டு குறைக்கப்படும் என்றும் , மற்ற பாதி 2025 க்குள் குறைக்கப்படும் எனவும் பிலிப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள், அமேசான், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில், பிலிப்ஸ் நிறுவனம் தற்போது 6000 ஊழியர்களை நீக்கம் செய்துள்ளது ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிலிப்ஸ் அறிமுகம் செய்த Sleep Respirators என்ற கருவி பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு வீழ்ந்த நிலையில், செலவுகளை கட்டுப்படுத்த 6000 ஊழியர்களை நீக்கியுள்ளது.