1. Home
  2. தமிழ்நாடு

பருமழை தீவிரம் – 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

பருமழை தீவிரம் – 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எர்ணாகுளம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2ஆம் தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பருமழை தீவிரம் – 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

இன்று முதல் நவம்பர் 2 வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like