1. Home
  2. விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!!

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!!

8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றன.

இந்த போட்டியின் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவையும், இரண்டாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!!

நேற்று கேப்டவுன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக அலீசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களத்தில் இறங்கினர்.

அலீசா 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த அஷ்லே கார்டனர் 29 ரன்னில் வெளியேறினார். கிரேஸ் ஹாரிஸ் 10 ரன்னும்,கேப்டன் மெக் லேனிங் 10 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். கடைசி வரை களத்தில் நின்ற பெத் மூனி 53 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 156 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னம் இஸ்மாயில், மேரிஸன் கேப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க விளையாடியது. தொடக்கம் முதலே சற்று தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடியது. தொடக்க வீராங்கனை லாரா அரை சதம் விளாசி அசத்தினார். எனினும், பிற வீராங்கனைகள் சொதப்பினர். கேப்டன் லுஸ் 2 ரன்னில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டிரையான் 25 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!!

கடைசி ஒரு ஓவரில் 27 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 130 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்திருந்து. கடைசி ஓவரில் இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Trending News

Latest News

You May Like