1. Home
  2. தமிழ்நாடு

வரும் 6ஆம் தேதி வரை பெட்ரோல் இலவசம்!!

வரும் 6ஆம் தேதி வரை பெட்ரோல் இலவசம்!!

வரும் 6ஆம் தேதி வரை பெட்ரோல் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பலரும் பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் எண்ணை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு ஓடிபி எண் வரும்.

அந்த எண்ணை பதிவிட்டால் வாகனத்திற்கு 50 ரூபாய் பெட்ரோல் இலவசமாக பெறலாம். இந்த சலுகை வரும் 6ஆம் தேதி வரை உள்ளது. ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் ஒரு முறை பதிவு செய்து விட்டு பணம் செலுத்தி பெட்ரோல் நிரப்பினால் அதற்கான பாயிண்டுகள் கிடைக்கும்.


வரும் 6ஆம் தேதி வரை பெட்ரோல் இலவசம்!!


இந்த சலுகை தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து பெட்ரோல் பங்குகளில் உள்ளதாகவும் இந்த சலுகை பெட்ரோலுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சலுகை குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரியவந்ததால் நாமக்கல் அடுத்துள்ள முத்துகாப்பட்டியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் ஏராளமானோர் குவிந்தனர். பெட்ரோல் பங்கில் மொபைல் எண்ணை பதிவு செய்துவிட்டு இலவசமாக 50 ரூபாய் பெட்ரோலை நிரப்பி செல்கின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like