ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன்!....
அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இதில், 30 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும், 6 வயது சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில்,ஆத்திரம் அடைந்த சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை நோக்கி ஒரு சுட்டுள்ளான். இந்த தாக்குதலில் ஆசிரியை பலத்த காயமடைந்து உள்ளார். உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில், அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் 6 வயது சிறுவன் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவத்தில் வேறு மாணவர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சிறுவனுக்கு எப்படி கிடைத்தது? இதன் பின்னணி என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக, வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அண்மையில் அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில் வீடு ஒன்றில் தற்செயலாக போலீசார் சோதனையிட சென்றபோது, அந்த வீட்டில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in