ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை - ரூ.58 கோடி ஊழல் செய்த முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை..!!

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை - ரூ.58 கோடி ஊழல் செய்த முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை..!!
X

சீனாவில் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் ஜின்பிங் எடுத்து வருகிறார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய அங்கம் வகித்தவர் ஃபூ ஜெங்குவா. சீனாவின் நீதித்துறை அமைச்சராகவும் இருந்தார்.

இவர் தனது பதவிக்காலத்தில் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து கொண்டு ரூ.58 கோடி வரையில் ஊழல் செய்ததாகவும், தனது குடும்பத்தினருக்கு சலுகைகள் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்கன் நகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில், நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சுமார் 58 கோடி ரூபாய் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பெற்ற குற்றத்திற்காக அந்நாட்டு முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஃபூ ஜெங்குவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it