அதிர்ச்சி! 560 உடல்களை அறுத்து உறுப்புகள் விற்பனை!!
அமெரிக்காவில் கொலராடாவை சேர்ந்த மேகன் ஹெஸ் (46) மற்றும் அவரது தாய் ஷெர்லி கோச் (69) ஆகிய இருவரும் சேர்ந்து இறுதிச் சடங்கு செய்யும் வேலையையும், 'டோனர் சர்வீசஸ்' என்ற உடல் உறுப்பு தான மையத்தையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் உரிமையாளர்களின் அனுமதியின்றி இறந்தவர்களின் உடல்களை அறுத்து உடல்பாகங்களை பிறருக்கு விற்பனை செய்ததாக தண்டிக்க பட்டுள்ளனர்.
தங்களிடம் வரும் சடலங்களை போலியான நன்கொடை படிவத்தின் மூலம் மருத்துவமனை மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கி மோசடி செய்துள்ளனர். அமெரிக்க சட்டங்களின்படி உடல் உறுப்புகளை விற்பது சட்டவிரோதமானது.
அதேநேரம் மருத்துவ கல்லூரிகளுக்கு தலைகள், கைகள் மற்றும் முதுகெலும்புகள் போன்ற உடல் பாகங்களை விற்பது சில மாகாணங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கள் உடல் உறுப்பு தான மையத்த்தை வைத்து விற்பனை செய்துவந்துள்ளனர். இந்த சம்பவம் தனியார் நிறுவனத்தின் புலனாய்வின் மூலம் வெளிவந்த நிலையில், அமெரிக்காவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உரிய அனுமதியின்றி 560 சடலங்களின் உடல் பாகங்களை இவர்கள் விற்பனை செய்தது தற்போது வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேகன் ஹெஸ்ஸுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவரின் தாய் ஷெர்லி கோச்சுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
newstm.in