1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்தது..!

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்தது..!

தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்துக்கு முன்பு வரை 1 பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.நவம்பர் மாதம் 5-ந்தேதி விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38160-க்கு விற்கப்பட்டது. அடுத்த 6 நாட்களில் தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது.தற்போது 43 ஆயிரத்தை தாண்டி ஒரு சவரன் விற்பனையாவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் வரும் காலங்களில் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.


இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்தது..!

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய் குறைந்து, ரூ.5,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ரூ.43,520-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,509-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 53 ரூபாய் குறைந்து, ரூ.4,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,400 ரூபாய் குறைந்து, ரூ.76,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like