1. Home
  2. தமிழ்நாடு

மூட நம்பிக்கையின் உச்சம்..!! சூடான இரும்பு கம்பி கொண்டு 51 முறை குத்தப்பட்ட 3 மாத குழந்தை..!!

மூட நம்பிக்கையின் உச்சம்..!! சூடான இரும்பு கம்பி கொண்டு 51 முறை குத்தப்பட்ட 3 மாத குழந்தை..!!

மத்திய பிரதேச மாநிலம், ஷங்டோல் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வரும் நிலையில், அங்கு 3 மாத கைக்குழந்தைக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியை கொண்டு குத்தினால் அந்த நோய் குணமாகிவிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதையடுத்து, நிமோனியாவுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்ற பெயரில் சூடான இரும்பு கம்பியால் குழந்தையின் வயிற்றில் 51 முறை குத்தி இருக்கின்றனர். இதனால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, குழந்தையின் உடல்நிலை மோசமடைய ஆரம்பித்திருக்கிறது. இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். 15 நாள்களுக்குப் பின் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.


மூட நம்பிக்கையின் உச்சம்..!! சூடான இரும்பு கம்பி கொண்டு 51 முறை குத்தப்பட்ட 3 மாத குழந்தை..!!

இந்த விவகாரம் தொடர்பாக ஷங்டோல் மாவட்ட ஆட்சியர் வந்தனா வைத், “உள்ளூர் அங்கன்வாடி பணியாளர் ஒருவர் குழந்தையின் வயிற்றில் குத்த வேண்டாம் என்று அந்த குழந்தையின் தாயாரிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஊழியர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆனால் அந்த குழந்தை இறப்பதற்கு முன்புவரை நிமோனியாவுக்கான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைய ஆரம்பித்திருக்கிறது. மக்கள் மத்தியில் மூடநம்பிக்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.

இது குறித்து மருத்துவரும், இளைஞர் காங்கிரஸ் தலைவருமான டாக்டர் விக்ராந்த் பூரியா கூறுகையில், “இது போன்று சூடான இரும்பு கம்பியால் குத்தப்படுவது மரணத்திற்கு வழிவகுக்கும்” என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹிதேஷ் வாஜ்பாய் கூறுகையில், “இது போன்ற நடைமுறைகள் இன்னும் வழக்கத்தில் உள்ளன. இது குறித்து புகார் பதிவுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.


Trending News

Latest News

You May Like