இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகிறது ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட்..!!
‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிவர் ஒபிலி என்.கிருஷ்ணா. இவரது இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து நடிகர் கௌதம் கார்த்திக்கும் நடிகை பிரியா பவானி சங்கரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்ததாக தெரிவித்திருந்தனர். தற்போது படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக இப்படம் டிசம்பர் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் வெளியீடு 3 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியது. இந்நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘பத்து தல’ வரும் மார்ச் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.