பயணிகளுக்கு எச்சரிக்கை.. ரயில்களில் இதை எடுத்துச் சென்றால் ரூ.5000 அபராதம்..!

பயணிகளுக்கு எச்சரிக்கை.. ரயில்களில் இதை எடுத்துச் சென்றால் ரூ.5000 அபராதம்..!
X

'ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

ரயில்களில் பட்டாசு, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தீபாவளி பண்டிகை நெருங்கும் போது வியாபாரிகள் மற்றும் பயணிகள் ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது.


இதை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரி பொருட்கள் எடுத்துச் செல்ல தடை இருந்து வருகிறது. இந்த விதியை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக பிடிபட்டால் 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.


தொடர்ந்து இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கும் வகையில், 'மெட்டல் டிடெக்டர்' உதவியுடன், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய உள்ளோம். தீபாவளி நெருங்கவுள்ள நிலையில், ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடுத்த வாரம் நடத்த உள்ளோம்' என்று கூறினார்.

Next Story
Share it