தேர்தலில் வெற்றி பெற்றால் ரூ.500க்கு சிலிண்டர்!!
குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றால், சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
182 சட்டப்பேரவை இடங்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் 1ஆம் தேதி முதல் கட்டம், 5ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இதனால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ந்நிலையில், குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை, ராஜஸ்தான் மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் வெளியிட்டார்.
அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
300 யூனிட் இலவச மின்சாரம், ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் தர உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. ஆட்சியரை தக்க வைக்க பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.
newstm.in