1. Home
  2. தமிழ்நாடு

நாட்டின் மொத்த செல்வத்தில் 50%, 100 பேரிடம் உள்ளது: ராகுல் காந்தி!...

நாட்டின் மொத்த செல்வத்தில் 50%, 100 பேரிடம் உள்ளது: ராகுல் காந்தி!...

நாட்டின் மொத்த செல்வத்தில் 50 சதவீதம் 100 பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.


காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது அரியானாவை சென்றடைந்துள்ளது.


நாட்டின் மொத்த செல்வத்தில் 50%, 100 பேரிடம் உள்ளது: ராகுல் காந்தி!...



அரியானா மாநிலத்தின் இரண்டாம் கட்டப் பயணத்தின் முதல் நாளான இன்று காலை பானிபட்டில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியது. பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, தீபேந்தர் சிங் ஹூடா, கரண் சிங் தலால், உதய் பன், குல்தீப் சர்மா உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியுடன் யாத்திரையில் கலந்து கொண்டனர்.


இன்று மதியம், பானிபட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிற மூத்த தலைவர்கள் உரையாற்றினர். அப்போது பேசிய ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 112 நாட்களை நிறைவு செய்துள்ளது என்றார். நாட்டின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது. ஆனால் நாட்டின் மொத்த செல்வத்தில் 50 சதவீதம் 100 பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது என்றார்.


இதில் உங்களுக்கு நியாயம் இருப்பதாக தெரிகிறதா? என்று கேள்வி எழுப்பிய ராகுல், இதுதான் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவின் யதார்த்தம் என்றார். இந்தியாவின் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பார்த்தால், 90 சதவீத லாபம் 20 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது என்று கூறினார்.


நாட்டின் மொத்த செல்வத்தில் 50%, 100 பேரிடம் உள்ளது: ராகுல் காந்தி!...



இந்த அரசாங்கம் இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளது. ஒரு இந்தியாவில் ஏழை மற்றும் எளிய மக்கள் வாழ்கிறார்கள். மற்றொரு இந்தியாவில் அனைத்து செல்வங்களும் கொண்ட 200-300 பேர் வாழ்கின்றனர் என்று ராகுல் குற்றம்சாட்டினார்.


ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நாட்டின் முதுகெலும்பை உடைத்துவிட்டது என்று கூறிய அவர், இந்தியாவிலேயே வேலையின்மையில் அரியானா 38 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது என்றார்.



நாட்டின் மொத்த செல்வத்தில் 50%, 100 பேரிடம் உள்ளது: ராகுல் காந்தி!...

அக்னிபாத் திட்டத்தால், இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இப்போது நம்பிக்கையிழந்துள்ளனர் என்றார். இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் 80,000 இளைஞர்களை ராணுவத்தில் அரசு நியமிக்க உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவிகிதத்தினர் மட்டுமே வேலை பெறுவர். மீதமுள்ளவர்கள் வேலையில்லாமல் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like