அதிர்ச்சி தகவல்! 50 கோடி பேருக்கு வாழ்வியல் நோய் ஏற்பட வாய்ப்பு!!

அதிர்ச்சி தகவல்! 50 கோடி பேருக்கு வாழ்வியல் நோய் ஏற்பட வாய்ப்பு!!
X

இன்னும் 8 ஆண்டுக்குள், அதாவது 2030க்குள் 50 கோடி பேருக்கு வாழ்வியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடல் செயல்பாடுகளின் உலக நிலவரம் 2022 அறிக்கையை ஐநாவின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. 194 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
2020 முதல் 2030 வரை உலக அளவில் 50 கோடி மக்களுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற வாழ்வியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால் உலக அளவில் ஆண்டுக்கு ரூ.2.21 லட்சம் கோடி அளவுக்கு கூடுதல் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க மக்களை உடற்பயிற்சி, இதர செயல்பாடுகளை மேற்கொள்ளச் செய்ய அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it