எஸ்இடிசி-யில் பயணம் செய்பவரா நீங்கள்..? அரசு பேருந்துகளில் வந்தது 50% கட்டணச் சலுகை..!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் கட்டண சலுகையை கொண்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6வது பயணம் முதல் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகளில் மக்கள் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக , வருவாயை பெருக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அப்போதே இந்திய அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று முதல் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில்தான் மக்கள் வருகையை அதிகரிக்கும் விதமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் கட்டண சலுகையை கொண்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.