மும்பையில் பகீர் சம்பவம்!! பெண்ணின் மாதவிடாய் ரத்தம் ரூ. 50 ஆயிரத்திற்கு விற்பனை..!!
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருமணமான சில நாட்கள் கழித்து அவரது கணவர், மாமியார் மற்றும் மாமனார் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பொறுத்து பொறுத்து பார்த்திருந்த அந்த பெண் ஒரு கட்டத்தில் அவரது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தார்.
பின்னர், அவரது பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். வரதட்சணை கேட்டு தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
அதில், “மாதவிடாயின் போது தனது கை, கால்களை கட்டிபோட்டு ரத்தத்தை சேகரித்து அதனை அகோரி பூஜை மற்றும் மாந்திரீக பூகைக்காக தனது மாமியார் கணவர் எடுத்து செல்வார்கள். இதனையே பல மாதங்களை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்கு மாமனார், மைத்துனர் என பலர் இதற்கு உடந்தைகயாக இருந்து வந்தனர். தனது மாதவிடாய் ரத்தத்தை எடுத்து மந்திரவாதியிடம் ரூ.50 ஆயிரத்தை விற்பனையும் செய்தனர்” என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மாமியார் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும், மகாராஷ்டிரா மாநிலம் மகளிர் ஆணையத்தின் தலைவி ரூபாலி சகங்கர் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் அகோரி பூஜைக்காக பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இது மனித குலத்தையே களங்கப்படுத்திய அவமானமான சம்பவம்.
இதுபோன்ற குற்றங்களில் இருந்த பெண்களை பாதுகாக்கவும், சமூகத்தில் அவர்களை வலுப்படுத்தவும் இன்னும் எவ்வளவு போராட்டம் அவசியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.