1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நாட்டில் துப்பாக்கிச் சூடு.. 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி..!

பிரபல நாட்டில் துப்பாக்கிச் சூடு.. 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி..!

அமெரிக்காவில், சால்ட் லேக் சிட்டியில் உள்ள வீடு ஒன்றில், 5 குழந்தைகள் உட்பட 8 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டியில் வீடு ஒன்றில் இருப்பவர்களின் நலனுக்கான பரிசோதனையில் ஈடுபட போலீசார் தற்செயலாக சென்றுள்ளனர். இதில், அந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 8 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரபல நாட்டில் துப்பாக்கிச் சூடு.. 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி..!

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ‘துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. பொதுமக்களுக்கு இதனால், அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை. நகரின் தென்பகுதியில் 8 ஆயிரம் பேர் வசிக்கக் கூடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது’ என தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க, ஆயுத கட்டுப்பாடு உள்ளிட்ட கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கான முயற்சியில் பைடன் தலைமையிலான அரசு இறங்கி உள்ளது. எனினும், தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

Trending News

Latest News

You May Like