1. Home
  2. தமிழ்நாடு

இனி குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்கினால் 5 முதல் 7 ஆண்டுகள் சிறைதண்டனை..!!

இனி குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்கினால் 5 முதல் 7 ஆண்டுகள் சிறைதண்டனை..!!

சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் சரணாலயத்தின் சாலையோரத்தில் சுற்றித்திரியும் குரங்குகள் அவர்களிடம் தின்பண்டங்களை வாங்கி உண்ணுகின்றன. இதனால் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரியும் குரங்குகள் வாகனங்கள் மோதி இறப்பது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகள் தின்பண்டங்கள் கொடுப்பதால், குரங்குகளால் இயற்கையோடு ஒன்றி வாழ முடியாத சூழலும் ஏற்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இனி குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்கினால் 5 முதல் 7 ஆண்டுகள் சிறைதண்டனை..!!

எனவே, அதிரடி நடவடிக்கையாக சரணாலயத்தில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் கொடுக்கக்கூடாது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. தின்பண்டங்கள் கொடுத்து பழக்கம் காண்பித்ததால் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அதுவே சுற்றுலாப் பயணிகள் தின்பண்டங்கள் கொடுக்காவிட்டால், குரங்குகள் சாலைக்கு வருவதும் குறைந்துவிடும். எனவே உத்தரவை மீறி தின்பண்டங்கள் கொடுக்கும் நபர்களுக்கு 5 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.


Trending News

Latest News

You May Like