நாள் ஒன்றுக்கு வெறும் 5 ரூபாயில் 600ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் இலவச ஓடிடி..!!

பிஎஸ்என்எல் நிறுவனம் பல சிறப்பு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது.வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்று தான் அத்தகைய ஒரு திட்டம். அந்த திட்டம் உங்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 5 ரூபாய் செலவழித்தால் போதும், நீண்ட கால செல்லுபடி நாட்களை பெறலாம். மேலும் அந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, ஓடிடி மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சேர்த்து அதிக டேட்டாவையும் வழங்குகிறது.
ரூ.1,999 வருடாந்திர ரீசார்ஜ் வவுச்சரைப் பற்றி தான் பேசுகிறோம்.ரூ. 1,999 வருடாந்திர திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள், 600ஜிபி அதிவேக டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதிகள் கிடைக்கும். டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும்.
குரல், தரவு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன், பிஎஸ்என்எல் 1,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கு இலவச பிஎஸ்என்எல் டியூன்களையும் வழங்குகிறது. இது தவிர, வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்களுக்கு இலவச Lokdhun மற்றும் Eros Entertainment சந்தாவையும் பெறுகிறார்கள்.