1. Home
  2. தமிழ்நாடு

கொடூரம்! 5 கி.மீ. தூரம் காரில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்!!

கொடூரம்! 5 கி.மீ. தூரம் காரில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்!!

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளம்பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் 4 கி.மீ வரை தரதரவென இழுத்து சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை கார் ஒன்று இளம்பெண்ணை இழுத்து செல்வதாக டெல்லியில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் சென்ற போலீஸார் கஞ்சவாலா என்ற பகுதியில் இளம்பெண்ணின் சடலத்தை நிர்வாண கோலத்தில் கண்டெடுத்தனர்.

இதனையடுத்து உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சுற்றுவட்டாரப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து காரில் சுற்றித்திரிந்த 5 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


கொடூரம்! 5 கி.மீ. தூரம் காரில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்!!


விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண், ஸ்கூட்டியில் வந்துள்ளார். அப்போது இளைஞர்கள் வந்த காரும், அந்த பைக்கும் மோதியதில் அந்த இளம்பெண்ணின் உடை காரில் சிக்கியது. அப்போது இளைஞர்கள் காரை ஓட்டி சென்றுள்ளனர்.

சுல்தான்பூரில் இருந்து சுமார் 5 கி.மீ வரை காரில் தரதரவென இழுத்து வரப்பட்டுள்ளார். இதில் அவரது உடை முழுவதுமாக கிழிந்து, சம்பவ இடத்திலேயே நிர்வாண கோலத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இளைஞர்கள் அனைவரும் போதையில் இருந்துள்ளனர்.


கொடூரம்! 5 கி.மீ. தூரம் காரில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்!!


கைது செய்யப்பட்ட அனைவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த பெண்ணின் வயது 23 இருக்கும் என தெரியவந்துள்ளது. அவர் யார் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் காவல்துறைக்கு சம்மன் அனுப்பியுள்ளார். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like