1. Home
  2. தமிழ்நாடு

மாணவி கூட்டு பலாத்காரம்.. வீடியோ எடுத்து பதிவிட்ட 5 மாணவர்கள் கைது..!

மாணவி கூட்டு பலாத்காரம்.. வீடியோ எடுத்து பதிவிட்ட 5 மாணவர்கள் கைது..!

10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட சக மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஹயநத்நகரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த மாணவியின் வீட்டிற்கு அவர் வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் சென்றுள்ளனர்.


அங்கு, அந்த மாணவியை சகமாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளான். பின்னர், இது குறித்து யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அந்த மாணவி, தனக்கு நடந்த கொடுமை குறித்து யாரிடமும் கூறவில்லை. இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் கழித்து, பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் மற்றொரு மாணவனை அழைத்துக்கொண்டு மீண்டும் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கு, மாணவியை மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


இந்நிலையில், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்த மாணவர், அதை சமூகவலைதளமான வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 மாணவர்களை கைது செய்தனர்.

Trending News

Latest News

You May Like