காதலில் தோற்றவர்களுக்கு மட்டும் ரூ.5க்கு ஸ்பெஷல் டீ! எங்கு தெரியுமா?

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும் ரூ.5க்கு ஸ்பெஷல் டீ! எங்கு தெரியுமா?
X

இளைஞர் ஒருவர் காதலில் தோற்றவர்களுக்கு மட்டும் 5 ரூபாய்க்கு டீ விற்று கவனம் ஈர்த்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியைச் சேர்ந்த அந்தார் குர்ஜர் என்ற இளைஞர் பி.ஏ இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கும், அவரது உறவினர் பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது.

5 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் சந்தித்த இருவரும், பின்னர் தொலைபேசி வாயிலாக நண்பர்களாக பழகி பேசிக்கொண்டனர். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண், இவரிடம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், நம்மால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் இளைஞரிடம் கூறுவிட்டார்.இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்தார், தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். அவரது நண்பர்கள் மீட்டு அறிவுரை கூறினர். அதனால் மனம் மாறிய அந்தார், கெத்தாக வாழ வேண்டும் என்று நினைத்து தற்போது கில்ஜிபூர் பேருந்து நிலையம் அருகே டீ கடை நடத்தி வருகிறார்.

கடைக்கு அவரது காதலி பெயரின் முதல் எழுத்தான 'M' என்பதை சேர்த்து 'M Bewafa Chaiwala' என்று பெயர் வைத்துள்ளார். ஏதேனும் கடை திறந்தால் அதற்கு தனது பெயரை வைக்கும்படி ஒருமுறை காதலி கேட்டுக் கொண்டதால், அவரது பெயரை வைத்துள்ளார்.


newstm.in

Next Story
Share it