1. Home
  2. தமிழ்நாடு

வந்தே பாரத் மீது கல் வீசினால் 5 ஆண்டு சிறை!!

வந்தே பாரத் மீது கல் வீசினால் 5 ஆண்டு சிறை!!

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து அதன் மீது கல் வீசப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் மாடுகள் மீது மோதுவதும், அல்லது கல் வீச்சுக்கு ஆளாவதும் செய்திகளாக வந்து கொண்டிருந்தன.

உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில், கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதனால் பயணிகளும் அச்சமடைந்தனர்.


வந்தே பாரத் மீது கல் வீசினால் 5 ஆண்டு சிறை!!

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசுவோருக்கு எதிராக ரயில்வே பாதுகாப்பு படையினரும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் ரயில் மீது கல் வீசப்படுவது தொடர்கிறது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதாவது, வந்தே பாரத் ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்துவது கிரிமினல் குற்றம் என்றும், இதற்கான தடைச் சட்டத்தின் கீழ், கைதாகும் நபர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியதாக, ரயில்வே பாதுகாப்பு படையினரால் இதுவரை 39 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like