1. Home
  2. தமிழ்நாடு

மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் விசாரணை காவல்!!

மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் விசாரணை காவல்!!

புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் விசாரணை காவல் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக சிசோடியா வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி இரண்டு முறை சம்மன் அனுப்பியது.

அதனைத் தொடர்ந்து சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சிபிஐ அனுமதி கோரியது. இதனையடுத்து, மனீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.


மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் விசாரணை காவல்!!


இந்நிலையில் நேற்று சிபிஐ தலைமையகத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாக விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 2ஆம் கட்ட விசாரணைக்கு சம்மன் அனுப்பியதால் அவர் சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகி இருந்தார்.

அப்போது அவரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 9 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார்.


சிபிஐ தரப்பில் விசாரணைக்காக 5 நாள் விசாரணைக் காவல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மார்ச் 4ஆம் தேதி வரை விசாரணை காவல் வழங்கி உத்தரவிட்டார்.

இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு மணி சிசோடியா அழைத்துச் செல்லப்பட்டார்.


newstm.in

Trending News

Latest News

You May Like