1. Home
  2. தமிழ்நாடு

ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டெல் நிறுவனம்..! 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவிப்பு..!!

ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டெல் நிறுவனம்..! 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவிப்பு..!!

உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டுவிட்டர் மற்றும் மெட்டா ஆகிய முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது.

38 வருடங்களுக்கும் மேலாக உலக அளவில் பர்சனல் கம்ப்யூட்டர்களை உருவாக்குவது மற்றும் கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்களை உருவாக்குவதில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது டெல் நிறுவனம்.

ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டெல் நிறுவனம்..! 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவிப்பு..!!

இந்த நிலையில், டெல் டெக்னாலஜிஸ் தனிநபர் கணினிகளுக்கான தேவை குறைந்து வருவதால், சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக அளவில் உள்ள அதன் பணியாளர்களில் 5 சதவீதமாகும்.

இது ஒன்றும் டெல் நிறுவனத்தின் முதல் பணிநீக்கம் இல்லை. 2020ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட தாக்கத்தின்போதும் டெல் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

Trending News

Latest News

You May Like