1. Home
  2. தமிழ்நாடு

எதிர்பார்த்ததை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையான டயானவின் ஆடை..!!

எதிர்பார்த்ததை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையான டயானவின் ஆடை..!!

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஏல நிறுவனமான 'சாத்பைஸ்' நிறுவனம் நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.

இது நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் ஆடை பெற்றுள்ளது. இந்த ஆடை 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது என சாத்பைஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உடையை இளவரசி டயானா கடந்த 1991-ம் ஆண்டு அரச குடும்ப வரைப்படத்திற்காக அணிந்தார் எனவும், அதன் பிறகு 1997-ம் ஆண்டு நடந்த போட்டோஷீட்டில் இந்த உடையை இளவரசி டயானா அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.


Trending News

Latest News

You May Like