அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு..!

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு..!
X

வடகொரியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மிக மோசமாக உள்ளது.


கடந்த சில மாதங்களாக உலகெங்கும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இப்போது மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது மக்களிடையே கொரோனா அடுத்த அலை குறித்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக, வடகொரியா நாட்டை கொரோனா வைரஸ் இப்போது பாடாய் படுத்துகிறது.

இந்தநிலையில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
Share it