1. Home
  2. தமிழ்நாடு

அரசு வேலை பறிபோகும் அச்சம்.. 5 மாத குழந்தை கால்வாயில் வீசி கொலை.. பெற்றோர் கைது..!

அரசு வேலை பறிபோகும் அச்சம்.. 5 மாத குழந்தை கால்வாயில் வீசி கொலை.. பெற்றோர் கைது..!

ராஜஸ்தானில் அரசு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த ஒருவர் தனது வேலை பறிபோய்விடும் எனக் கருதி தனக்கு பிறந்த 3வது குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் ஜவர்லால் மேக்வால் (36). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவரது மனைவி மீண்டும் கர்ப்படைந்தார். சமீபத்தில் அவர்களுக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.


மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் அரசு ஊழியர்கள் கட்டாய ஓய்வு பாலிசி அந்த மாநிலத்தில் உள்ளது. இதனால், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தால் நிரந்தர வேலை குறித்த அச்சம் அவருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், அவரும் அவரது மனைவியும் மூன்றாவது குழந்தையால் தனது வேலையில் எந்தவித பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஐந்து மாத குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, குழந்தையை சத்தர்கர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கால்வாயில் வீசியுள்ளனர்.


இதுகுறித்து பிகானேர் காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் யாதவ் கூறுகையில், “தங்கள் மகளைக் கொன்ற வழக்கில் தம்பதியர் கைது செய்யப்பட்டனர். நிரந்தர அரசுப் பணியைப் பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர், உடந்தையாக இருந்த மனைவியும் சேர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்” என்றார்.

Trending News

Latest News

You May Like