1. Home
  2. தமிழ்நாடு

உலகத்திலேயே உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை தமிழகத்தில் திறப்பு..!! எங்கு தெரியுமா ?

உலகத்திலேயே உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை தமிழகத்தில் திறப்பு..!! எங்கு தெரியுமா ?

வேலூர் மாவட்டம் திருமலைக்கோடி அருகே உள்ள ஸ்ரீபுரம் தங்க கோவில் உள்ளது. இந்த வளாகத்தில் 23 அடி உயர ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 23 அடி உயரம் 18 அடி அகலம் 15 ஆயிரம் கிலோ ஐம்பொன்னால் 4 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது.

உலகத்திலேயே உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை தமிழகத்தில் திறப்பு..!! எங்கு தெரியுமா ?

இந்த சிலை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திம்மக்குடியை சேர்ந்த சிற்பச்சாலை உரிமையாளர் வரதராஜன். இவர் வேலூர் பொற்கோயிலுக்காக 2010-ம் ஆண்டு 23 அடி நடராஜர் சிலை செய்ய ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில் ஊற்றி பணியை தொடங்கினார்.

பின்னர் போதிய நிதி இல்லாததால் அந்த பணி பாதியில் நின்றது. 2012-ம் ஆண்டு வேலூர் நாராயண சக்தி பீடத்தின் ஒத்துழைப்போடு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு 10 ஆண்டில் பணிகள் முடிவடைந்தது. இதைதொடர்ந்து கடந்த மாதம் 12-ம் தேதி நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளாமனோர் வழிபட்டு சென்றனர்.

இந்நிலையில் ஆனந்த தாண்டவ நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பீடம் தனியாகவும், திருவாச்சியுடன் சாமி தனியாகவும் கிரேன் உதவியுடன் தனித்தனியாக பிரிக்கப்பட்டு கடந்த 6-ம் தேதி மாலை 2 லாரிகளில் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சிலை தற்போது ஸ்ரீபுரம் தங்கக் கோவில் அருகே உள்ள திருமண மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை சக்தி அம்மா திறந்து வைத்தார். நாராயணி பீட இயக்குனர் சுரேஷ், மேலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Trending News

Latest News

You May Like