அதிர்ச்சி! குழந்தைகளுக்கு வெறும் உப்பு கலந்து பள்ளியில் சத்துணவு!!
மதிய உணவுத் திட்டத்தில் வெறும் சாதத்தில், உப்பு கலந்து மாணவர்கள் சாப்பிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள அரசு பள்ளியில்தான் மதிய உணவுத் திட்டத்தில்தான் மாணவர்களுக்கு வெறும் சாதத்துடன் உப்பு கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து அப்பள்ளி முதல்வரை மாவட்ட ஆட்சியர் பணி இடை நீக்கம் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பதிவிட்டு முதல்வர் யோகி பாபா இதை பாருங்கள் என பெற்றோர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு இதேபோன்று மதிய உணவுத் திட்டத்தில் மிர்சாபூர் மாவட்ட உள்ள பள்ளியில் ரொட்டியும், அதை தொட்டுக்க உப்பு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறித்த செய்தி வெளியானது. இதையடுத்து அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் கூறி யோகி அரசாங்கம் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது.
அதே போல் வேகாத ரொட்டியும், தண்ணீர் கலந்த வேகாத பருப்பும்தான் வழங்கப்படுவதாக போலிஸார் ஒருவர் கண்ணீருடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, யோகி அரசு மீது குற்றச்சாட்டு வைத்த போலிஸார் மன நிலை சரியில்லை என கூறி அவரை பணி நீக்கம் செய்யப்பட்டர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.
newstm.in