முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க 45 கோடி.? தர்ணாவில் இறங்கிய பாஜகவினர்..!!
டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த தனது வாக்குறுதிக்கு துரோகம் இழைத்து விட்டார். ஆடம்பரம் மற்றும் வசதி ஆகியவற்றிற்கு ஆசைப்படுபவர் என குற்றச்சாட்டாக கூறினார்.
கெஜ்ரிவாலின் இல்லம் வியட்நாம் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மார்பிள் கற்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான திரை சீலைகள் மற்றும் முன்பே வடிவமைக்கப்பட்ட மர சுவர்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. ஒரேயொரு திரை சீலை மட்டுமே ரூ.7.94 லட்சத்திற்கு கூடுதலான விலை பெறும் என்றும் பத்ரா கூறினார்.
இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் இல்லம் டெல்லி அரசு சார்பில் ரூ.45 கோடி செலவு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு உள்ளது என கூறி பா.ஜ.க. கட்சி தொண்டர்கள், டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு வெளியே தொடர்ந்து காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த புனரமைப்பு பணிகள் நடந்து உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.