1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் 4000 புதிய பஸ்கள் வாங்கப்படும் : அமைச்சர் சிவசங்கர்..!!

விரைவில் 4000 புதிய பஸ்கள் வாங்கப்படும் : அமைச்சர் சிவசங்கர்..!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குன்னம் தொகுதியில் சுடுகாட்டில் மணல் குவாரி அமைத்து மணல் எடுத்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் இணைந்து நானும் போராட்டம் நடத்தினேன். அப்போது போலீசார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளேன். இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 12-ந்தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர்.

தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் புதிய தொழிலாளர்கள் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை வெளியிட்டுள்ளார். அதன் பேரில் முதல் கட்டமாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வருங்காலங்களில் 6 அரசு போக்குவரத்து கழகத்தில் முதலமைச்சர் அனுமதி பெற்று போக்குவரத்து தொழிலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளனர்.

கடந்த கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வந்தது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளன. விரைவில் புதிய பஸ்கள் வாங்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகளில் 280 கோடி பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர் செய்யும் தவறுக்கு தமிழ்நாடு முழுவதும் இந்த நிலை நீடிக்கிறது என்று கூறுவது தவறு. நல்ல முறையில் இலவச பயணத் திட்டம் செயல்பட்டு வருகின்றது. வெளியூரிலிருந்து பயணம் செய்பவர்களுக்கு உணவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சரியான முறையில் செயல்படாத 2 உணவுகங்கள் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like