1. Home
  2. தமிழ்நாடு

தன்னை விட 4 வயது மூத்த நடிகையுயை திருமணம் செய்யும் ‘பசங்க’ கிஷோர் ..?

தன்னை விட 4 வயது மூத்த நடிகையுயை திருமணம் செய்யும் ‘பசங்க’ கிஷோர் ..?

இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பசங்க. இதில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்தவர் கிஷோர்.இப்படத்தில் அதிகமாக குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காட்டப்படும். இப்படம் அப்போது வெற்றியடைந்தது. இப்படம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து சமீபத்தில் தான் இந்த படத்தில் நடித்து இருந்த கிஷோருக்கு, தமிழ்நாடு அரசின் விருது மற்றும் தேசிய விருது வழங்கப்பட்டது.

சிறுவர்களை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இப்படம் தேசிய விருது பெற்றது. இந்தப் படத்தில் சிறுவர்களாக கிஷோர், ஸ்ரீராம், பக்கோடா பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த சிறுவர்கள் பின்னர் கோலி சோடா, கோலி சோடா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் பசங்க கிஷோர் சகா, ஆறு அத்தியாயம், வஜ்ரம், நெடுஞ்சாலை, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.


தன்னை விட 4 வயது மூத்த நடிகையுயை திருமணம் செய்யும் ‘பசங்க’ கிஷோர் ..?



நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டு நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வந்த நடிகர் கிஷோர் சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவ். சமீபத்தில் கிஷோர் இன்ஸ்டா போஸ்ட் மூலம் தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர் பிரபல சீரியல் நடிகையான ப்ரீத்தி குமாரை காதலித்து வருகிறார். ப்ரீத்தி நடிப்பதை கடந்து மாடல், தொகுப்பாளர் என திகழ்ந்து வருகிறார். இவர் லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம் மறப்பதில்லை, பிரியமானவள், சுந்தரி நீயும் சுந்தரி நானும், வானத்தப்போல போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 32 வயதாகும் இவர் தன்னை விட நான்கு வயது சிறியவரான கிஷோரை அடுத்த ஆண்டு திருமணம் செய்ய இருக்கிறார்.



ப்ரீத்திக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் கிஷோர் "நமது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு நாம் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடுவோம். லவ் யூ அச்சோமா!!! என பதிவிட்டு இருந்தார். பசங்க படத்தில் மிகவும் புத்திசாலியான அன்பு பையனுக்கு கல்யாண வயசு வந்துடுச்சா என ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Trending News

Latest News

You May Like