1. Home
  2. தமிழ்நாடு

பாடம் நடத்தாத பேராசிரியர்களுக்கு சம்பளம்: அரசுக்கு மாதம் ரூ.4 கோடி இழப்பு..!

பாடம் நடத்தாத பேராசிரியர்களுக்கு சம்பளம்: அரசுக்கு மாதம் ரூ.4 கோடி இழப்பு..!

கல்லூரி மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்காமல் பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியதில், மாதம் ஒன்றுக்கு ரூ.4 கோடி ரூபாய் பாகிஸ்தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் வேனா என்ற இடத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் பழங்குடியின தலைவர்கள் ஒத்துழைப்புடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு மகளிருக்கான டிகிரி கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது.


இதில் பணியாற்றும் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு கல்வி கற்று தரும் பணியை முறையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோசடியான முறையில், கல்வி பணியை செய்யாமல் பேராசிரியர்கள் மாதாமாதம் சம்பளம் வாங்கி செல்கின்றனர். ஆனால், அவர்கள் கல்லூரிக்கே வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்காமல் பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. அந்த வகையில், மாதம் ஒன்றுக்கு சம்பளம் என்ற வகையில் ரூ.4 கோடி பாகிஸ்தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Trending News

Latest News

You May Like