1. Home
  2. தமிழ்நாடு

இளம்பெண்ணை கட்டிப்போட்டு 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!

இளம்பெண்ணை கட்டிப்போட்டு 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!

சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரகர் பகுதியை அடுத்த சிப்சிபி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அந்த பகுதியிலுள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் அங்கு தனியே வேலை செய்வதை நோட்டமிட்ட கும்பல் திடீரென அந்த சுகாதார நிலையத்தினுள் நுழைந்து பெண்ணை தாக்கி கட்டிப்போட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தது.

மேலும் அதனை தங்களது மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். இதை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு சென்ற அந்த பெண் நடந்தவற்றை தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.


இளம்பெண்ணை கட்டிப்போட்டு 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!

அவர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ள நிலையில், ஒரு நபர் மட்டும் தலைமறைவாகியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர்ந்து வேலை செய்ய மாட்டோம் என்று தலைமை சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like