1. Home
  2. தமிழ்நாடு

போலீஸ் அதிர்ச்சி..!! 4 பேர் பலாத்காரம் செய்து விட்டதாக போலியாக புகார் அளித்த இளம்பெண்...!

போலீஸ் அதிர்ச்சி..!! 4 பேர் பலாத்காரம் செய்து விட்டதாக போலியாக புகார் அளித்த இளம்பெண்...!

செங்கல்பட்டு ரெயில்வே நிலையத்தில், சென்னை செல்வதற்காக காத்திருந்த போது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் மிரட்டி கடத்திச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவை அனைத்தும் முன்னுக்குபின் முரணான தகவலாக உள்ளது என்றும், நடத்திய விசாரணையில் அந்த பெண் காதலனை மட்டுமே சந்தித்து சென்றதாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

காதலனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காதலனை போலீசாரிடம் சிக்க வைக்க நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. விசாரணையில் அந்த பெண் போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. காதலனை பழிவாங்க இது போன்ற நாடகம் நடத்தியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Trending News

Latest News

You May Like