வங்கி வாடிக்கையாளர்களே உஷார்..!! வரும் சனிக்கிழமை முதல் 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது..!!

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்..!! வரும் சனிக்கிழமை முதல் 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது..!!
X

வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU), நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன் காரணமாக குடியரசு தின விழா மற்றும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக இன்று முதல் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30ம் தேதி (திங்கள்) மற்றும் 31ம் தேதி (செவ்வாய்) ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினங்களில் தமிழக முற்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது வங்கிகளும் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.

இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை, வரும் 28-ம் தேதி, 4வது சனிக்கிழமை என்பதாலும், அன்றைய தினமும் விடுமுறை. அதேபோல மறுநாள் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாள் ஆகும். இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்படும்.
வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் இதற்கேற்ப தங்களது வேலை திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Next Story
Share it