பெரும் அதிர்ச்சி! ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா!!
சீனாவில் உருமாறிய பிஎஃப் .7 கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கோவிட் பாலிசி, ஜீரோ கோவிட் பாலிசி எனப்படும் கொரோனா கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டது.
அதன்பிறகு சீனாவில் மளமளவென கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் நடத்திய 20 நிமிடக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசு ஆவணம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
டிசம்பர் 1 முதல் 20ஆம் தேதி வரை சீனாவில் கிட்டத்தட்ட 25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணம் சொல்கிறது. இது சீனாவின் மக்கள் தொகையில் 17.65 சதவிகிதம்.
டிசம்பர் 20ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in