1. Home
  2. தமிழ்நாடு

டெங்கு பாதிப்பால் 36 பேர் உயிரிழப்பு!?

டெங்கு பாதிப்பால் 36 பேர் உயிரிழப்பு!?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளானதால் பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நகரின் பல பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் பூச்சி கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் டெங்குவை கட்டுப்படுத்தாமல் உத்தரப்பிரதேச அரசு, குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


டெங்கு பாதிப்பால் 36 பேர் உயிரிழப்பு!?


இந்நிலையில் பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 36 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் அரசு நிர்வாகம் வெளியிடவில்லை.

பிரயாக்ராஜ் நகரில் பல இடங்களிலும் டெங்கு பரவல் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like