1. Home
  2. தமிழ்நாடு

பனி மூட்டத்தால் 35 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!!

பனி மூட்டத்தால் 35 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!!

இன்று அதிகாலை பனி மூட்டத்தால் 35 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து நேரிட்டது.

தற்போது நாடு முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் காலை வேளையில் பனிமூட்டம் அதிகம் இருப்பதால் கடும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது.

காலை 8 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென நின்ற நிலையில், அதன் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.


பனி மூட்டத்தால் 35 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!!


இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 2 மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது . டெல்லி - மீரட் விரைவுச்சாலையில் இந்த விபத்து நேரிட்டது. பனிமூட்டத்தால் அடுத்தடுத்து 35க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டன.

மசூரி பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்தது. எனவே விபத்து நேரிட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல வாகனங்கள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.


newstm.in

Trending News

Latest News

You May Like