1. Home
  2. தமிழ்நாடு

புயலால் சென்னை மெட்ரோவுக்கு ரூ.3.45 கோடி இழப்பு!!

புயலால் சென்னை மெட்ரோவுக்கு ரூ.3.45 கோடி இழப்பு!!

மாண்டஸ் புயலால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து அகற்றினர். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன.


புயலால் சென்னை மெட்ரோவுக்கு ரூ.3.45 கோடி இழப்பு!!

புயலின் தாக்கம் நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து சேத மதிப்பீட்டை கணக்கிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலைய மேற்கூரைகள், வழிகாட்டி பலகைகள் சேதம் மற்றும் குழாய் உடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like