1. Home
  2. சினிமா

‘வாரிசு’, ‘துணிவு' படங்களை வெளியிட்ட 34 தியேட்டர்களுக்கு நோட்டீஸ்..!


அனுமதியின்றி நள்ளிரவில் ‘வாரிசு’, ‘துணிவு' படங்களை வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு' ஆகிய படங்கள் ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களுக்காக, பல்வேறு திரையரங்குகளில் நள்ளிரவு ஒரு மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சிகளை பயன்படுத்தி தியேட்டர் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


இந்நிலையில், அனுமதியின்றி ‘வாரிசு', 'துணிவு' திரைப்படங்களை திரையிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் அவர் எச்சரித்து இருக்கிறார்.

தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து 15 நாட்களுக்குள் திரையரங்கு உரிமையாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like