ஊழியர்களுக்கு ஷாக்..! 3,200 பேரை பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்..!

ஊழியர்களுக்கு ஷாக்..! 3,200 பேரை பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்..!
X

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான், விப்ரோ உள்ளிட்ட முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லட்சக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். யாரும் எதிர்பாராத வகையில் நாள்தோறும் ஐ.டி. நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவது, ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலகளவில் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள ஃபோர்டு நிறுவனம், ஐரோப்பாவில் 3,200 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தேவை அதிகரித்துள்ள நிலையில், அதற்கான செலவுகளும் அதிகரித்துள்ளது. எனவே, செலவினங்களை சமாளிக்கவே, ஃபோர்டு நிறுவனம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
Share it