இனி சாலைகளில் மாடுகள் சுற்றினால் ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும்..!!
வீடுகளில் மாடுகளை வளர்க்காமல், அவற்றை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். இவை கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிவதால், போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து, மாநகராட்சி நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
ஏற்கனவே, நகராட்சி நிர்வாகம், பல முறை மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளரை எச்சரித்தும் மாடுகளை தெருவில் விடுவது நிற்கவில்லை.
இந்நிலையில் சாலையில் மாடுகள் சுற்றித்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என ஓசூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. மாடுகள் பறிமுதல் செய்து ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓசூர் மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் விதமாக அபராதத் தொகையை ரூ.1550-இல் இருந்து ரூ.3000 ஆக மாநகராட்சி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது