இனி ஆன்லைன் கேமிங்-ல் வெற்றிபெற்ற பணத்திற்கு 30% வரி..!!
ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. இதில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள இளைஞர்கள் எப்படியாவது பணம் சம்பாதித்திட வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் குறைந்த பணத்தை முதலீடு செய்து விளையாடுகின்றனர்.ஆனால் ஆன்லைன் கேமிங் மூலம் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை. ஒரு சிலரே குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை பெறுகின்றனர். அதை நம்பி பலரும் அதில் பணம் கட்டி விளையாடி தோற்றுப் போகின்றனர்.
இந்நிலையில், ஒரு நிதியாண்டில் ஆனலைன் கேமிங் மூலம் ரூ.10,000 மேல் வருமானம் ஈட்டினால் 30% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
உதரணமாக தனிநபர் ஒருவர் ரூ.1,000 இலவசமாக செலுத்தி ரூ.35,500 வென்றுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். பின்னர், ஆன்லைன் கேமிங் நிறுவனம் 35,500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயை அதிலிருந்து கழிக்கும். அதன்பின் இருக்கும் ரூ.34,500 க்கு 30% (ரூ.34,500-30%) டிடிஎஸ் வரி கணக்கிடப்படும். அதில் ரூ.10,350 டிடிஎஸ் தொகை அரசாங்கத்திற்கு டெபாசிட் செய்யப்படும் மற்றும் மீதமுள்ள ரூ.24,150 தனிநபர் கணக்கில் வரவு வைக்கப்படும்.