திடீர் விபத்து.. பிரபல நடிகருக்கு 30 எலும்புகள் முறிவு..!

திடீர் விபத்து.. பிரபல நடிகருக்கு 30 எலும்புகள் முறிவு..!
X

‘அவெஞ்சர்ஸ்’, ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படங்களில் இடம் பெற்ற ஹாவ்கீ பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஜெர்மி ரெனர். இவர், அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் வசித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது, பனியை அகற்றும் வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தான் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், “இந்த புத்தாண்டில் அனைத்தும் மாறிவிட்டன. என் குடும்பத்திற்கு சோகத்தை உண்டாக்கிய இச் சம்பவத்தில் இருந்து விடுபட்டு இருக்கிறேன்.

எனக்கும், என் குடும்பத்திற்கும் நீங்கள் காட்டிய அக்கறைக்கும் ஆதரவுக்கும் நன்றி. குடும்பம் மற்றும் நண்பர்களுடனான அன்பும் பிணைப்பும் வலுவடைவதைப் போல, இந்த 30க்கும் மேற்பட்ட உடைந்த எலும்புகள் வலுவடையும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it