அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..!!
தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் காலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கர்நாடகா மற்றும் கேரள கடலோர பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கன்னியாகுமரியிலும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , ராணிப்பேட்டையில் லேசான மழை பெய்யும் எனவும் கிருஷ்ணகிரி , தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.