1. Home
  2. தமிழ்நாடு

கள்ளிக்குறிச்சி பள்ளி – 3ஆவது தளத்திற்கு சீல்!!

கள்ளிக்குறிச்சி பள்ளி – 3ஆவது தளத்திற்கு சீல்!!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளிக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 3ஆவது தளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வன்முறையை தொடர்ந்து பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும், எனவே பள்ளியை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு மாத காலத்துக்கு நேரடியாக வகுப்புகளைத் தொடங்க பள்ளி நிா்வாகத்துக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு அப்போதைய நிலைமையை ஆராய்ந்து நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் எல்.கே.ஜி. முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.


கள்ளிக்குறிச்சி பள்ளி – 3ஆவது தளத்திற்கு சீல்!!

கனியாமூர் பள்ளியைத் திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார்.

மேலும் நாளை முதல் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்தார். மேலும், பள்ளியில் உள்ள ஏ பிளாக்கின் மூன்றாவது தளத்தை சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். அதன்படி, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் கனியாமூர் தனியார் பள்ளியின் 3ஆவது தளத்திற்கு பூட்டி இன்று சீல் வைக்கப்பட்டது.

newstm.in

Trending News

Latest News

You May Like